மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு மரியா செலுத்தும் வகையில் கனடாவில் இதுவரையில் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் மகாராணியை மரியாதை செய்யும் வகையில் விடுமுறை அறிவித்துள்ளன.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ம் திகதி பிரித்தானிய மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கிரியை நிகழ்வுகளில் கனேடிய ஆளுனர் நாயகம் பிரதமர் உள்ளிட்டவர்கள் பங்குபற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.