Home இலங்கை 15 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மருத்துவர்

15 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மருத்துவர்

by Jey

கராப்பிட்டிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 15 வயதான சிறுமியை மோசமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மருத்துவரை காலி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து பொலிஸார் மருத்துவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான மருத்துவருக்கு எதிராக சிறுமியின் தாய் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இதற்கு அமைய ஹபராதுவ அங்குலுகக, கோப்பிவத்த பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், மூன்று லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிகிச்சை பெறுவதற்காக 15 வயதான சிறுமி தனது தாயாருடன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமி, ஸ்கேன் பரிசோதனைக்காக கடந்த 8 ஆம் திகதி கதிரியக்கப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது மருத்துவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தங்கி சிகிச்சை பெறும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய், வைத்தியசாலையின் பிரதான மருத்துவரிடம் இது பற்றி முறைப்பாடு செய்து விட்டு, காலி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரான மருத்துவரை கைது செய்ய பொலிஸார் முயற்சித்த போது அவர் வைத்தியசாலையில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காலி தலைமையக பொலிஸ் பரிசோதகர் சேனாதிபதி டி சில்வாவின் மேற்பார்வையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளை விசாரணைகளை நடத்தி வரும் காலி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணிகம், சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

பரிசோதனையில் சிறுமி மோசமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய அமரசிங்க கூறியுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என்ற போதிலும் முறைப்பாட்டை புறந்தள்ள முடியாது என்பதால், தற்போது நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அதிகார சபை முன்னிலையாகும் எனவும் அவர்

related posts