எதிர்வரும் 19ம் திகதி சமஷ்டி விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
காலஞ் சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகளில் ஒன்றான கனடாவில் சமஷ்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், மாகாணங்கள் பொதுவிடுமுறை குறித்து மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
சில மாகாணங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கனடாவின் ஒன்றாரியோ உள்ளிட்ட சில மாகாணங்களில் பொதுவிடுமுறை கிடையாது என தெரிவிக்ப்பட்டுள்ளது.
எவ்வாறனினும் அநேகமான மாகாணங்கள் தேசிய துக்க தினமாக எதிர்வரும் 19ம் திகதியை அனுஸ்டித்துள்ளன.