Home உலகம் இரு நாடுகளுக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

இரு நாடுகளுக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

by Jey

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இந்தியா வரும்படி அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி அந்த நாட்டின் தேசிய தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தன் பயணத்தை நிறைவு செய்தார்.தன் பயணத்தின் போது அரசியல், எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து சவுதி அரேபியாவின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன், அமைச்சர் பேச்சு நடத்தினார்.

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானையும் சந்தித்துப் பேசிய ஜெய்சங்கர், அவரிடம் சவுதியின் தேசிய தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதியிருந்த கடிதத்தையும் ஒப்படைத்தார்.
இது குறித்து, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சவுதி இளவரசர், 2019ல் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்த பயணத்தின் போது, இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து, அவர் பேச்சு நடத்தினார். அப்போது மீண்டும் இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் சவுதி பயணத்தின் போது இந்தியாவுக்கு வரும்படி சவுதி இளவரசருக்கு மீண்டும் அழைப்பு விடுத்து பிரதமர் எழுதிய கடிதம், அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.வெளியுறவு அமைச்சரின் சவுதி பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

related posts