இலங்கை அணியின் ஆசிய கிண்ண வெற்றிக்கு நாமல் ராஜபக்சதான் காரணம் என கூறுவது நகைச்சுவையான விடயம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் வெற்றியின் பெருமை நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமில்லை, அது கிரிக்கெட் வீரர்களுக்கே உரித்தானது என சுட்டிக்காட்டியுள்ளார்.