கனடாவின் வங்கிகள் எதிர்வரும் 19ம் திகதி வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய வங்கியாளர் ஒன்றியம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இரங்கல் வெளியிடும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
எனினும் வங்கிகள் மூடப்படாது எனவும் வழமை போன்று வங்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வங்கிகள் எவ்வாறு இயங்கும் என்பதனை அறிந்து கொள்ள அந்தந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
கனேடியர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நோக்கில் இவ்வாறு வங்கி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கத் தீர்மானித்ததாக வங்கியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.