கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான சொல் மமாக்வா Sol Mamakwa கனேடிய நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.
ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்தில், கடந்த புதன்கிழமையன்று மன்னர் மூன்றாம் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
NDP கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Mamakwa, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
Mamakwa உறுதிமொழி எடுத்துக்கொள்ளாததுடன், அவரும் மற்றொரு NDP நாடாளுமன்ற உறுப்பினரான Guy Bourgouin என்பவரும், கடவுள் மன்னரைக் காப்பாற்றட்டும் என்ற பாடல் பாடப்படும்போது, அதிலும் பங்கேற்கவில்லை.