மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளிலும் அஞ்சலி செலுத்த வேண்டுமென ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லீஸ் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 19ம் திகதி இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மௌன அஞ்சலி உள்ளிட்ட அஞ்சலி நிகழ்வுகளை பாடசாலைகளில் நடாத்த வேண்டுமென அவர் வலிறுயுறுத்தியுள்ளார்.
யோர்க் பிராந்திய பாடசாலைகளில் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை குறைந்தளவில் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த்து.
பாடசாலை சபையினால் விடுக்கப்பட்ட இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அஞ்சலி நிகழ்வுகளை சரியான முறையில் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.