கனேடிய டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் தடவையாக இவ்வாறு பாரியளவு சரிவினை கனேடிய டொலர் சந்தித்துள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமைகளும் இந்த டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏதுவாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கனேடிய டொலரின் பெறுமதி 75.27 சதங்களாக காணப்பட்டது.
இதேவேளை, எதிர்வரும் 2023ம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.