நோர்த் யோர்க்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
நியூடன்புருக் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கவனயீனமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் றொரன்டோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த விபத்துச் சம்பவம் பற்றிய விபரங்கள் ஏதும் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.