உலகில் முதன் முறையாக, பறக்கும் பைக்கை தயாரித்துள்ள ஜப்பான், அதை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகமயமாக்கலுக்குப் பின் சந்தைகளில் நவீன வாகனங்களின் அணிவகுப்பு தொடர்கிறது. தற்போது சந்தையில் தொடர்ச்சியாக அதிவேக பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின்சாரம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.கார் கடலில் செல்வதும், பைக் பறப்பதும் என ஹாலிவுட் சினிமாக்களில் கற்பனையான காட்சிகளைக் பார்த்து மகிழ்ந்திருப்போம்.
‘பேட் மேன்’ என்ற படத்தில், பறக்கும் பைக்கில் செல்வர். இது, தற்போது நிஜமாகியுள்ளது.அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடந்த வாகனக் கண்காட்சியில், பறக்கும் பைக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த பைக்கை, ஜப்பானைச் சேர்ந்த ஏர்விங்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ட்ரோன் போன்ற இந்த பைக், தொடர்ந்து ௪௦ நிமிடம் பறக்கும் திறன் உடையது. இதன் விலை 6கோடி ரூபாய் தான்.