இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வெறும் 6 நாட்களில் (செப்.20, 23, 25) முடிந்து விடுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இத்தொடரில் புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 2வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
தற்போது இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதல் இடத்திலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 24,208 ரன்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 24,002 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்நிலையில் இத்தொடரில் விராட் கோலி இன்னும் 207 ரன்கள் எடுப்பதன் மூலம் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து 2வது இடத்துக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் விராட் கோலி தனது 71 வது சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்க