Home கனடா நிரந்தர வதிவிட உரிமையை வழங்குமாறு கோரி குடியேறிகள் கோரிக்கை

நிரந்தர வதிவிட உரிமையை வழங்குமாறு கோரி குடியேறிகள் கோரிக்கை

by Jey

நிரந்தர வதிவிட உரிமையை வழங்குமாறு கோரி கனடிய நகரங்களில் குடியேறிகள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கனடாவில் தங்கியுள்ள குடியேறிகள் தங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

குறிப்பாக ஆவணங்கள் இல்லாத குடியேறிகளே இவ்வாறு கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

றொரன்டோ உள்ளிட்ட பல நகரங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வெளிநாட்டு குடியேறிகள் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் குடியுரிமைச் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடியேறிகள் பல ஆண்டுகளாக நிரந்தர வதிவிட உரிமைக்காக காத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த புகலிட கோரிக்கையாளர்களுக்கு விசேட நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டது இந்த நடைமுறையை ஏனைய குடியேறிகளுக்கும் அமல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

related posts