Home உலகம் பல்லாண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த ராணியின் மறைவு

பல்லாண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த ராணியின் மறைவு

by Jey

அந்த நாட்டின் நீண்ட கால ராணியாகவும், காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் 70 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96), கடந்த 8-ந்திகதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் காலமானார்.

பல்லாண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த ராணியின் மறைவு, இங்கிலாந்து மட்டுமின்றி உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் (73) மன்னர் ஆனார்.

பொதுமக்கள் அஞ்சலி ஸ்காட்லாந்தில் இருந்து லண்டன் கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத்தின் உடல், பக்கிங்ஹாம் அரண்மனையில் அரச குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் கடந்த 14-ந் திகதிமாலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது கிரீடமும், செங்கோலும் வைக்கப்பட்டன.

 

related posts