Home உலகம் இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் – இந்திய தூதரகம் கடும் கண்டனம்

இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் – இந்திய தூதரகம் கடும் கண்டனம்

by Jey

இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் (19-ந்தேதி) இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இரு பிரிவினர் இடையே வன்முறையும் வெடித்தது. கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனிடையே, லீசெஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார்.

இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர். இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் லீசெஸ்டர்ஷையர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்த விவகாரம் பற்றி எடுத்து சென்று உள்ளோம்.

related posts