Home கனடா கனேடிய எல்லைப் பகுதியில் கோவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு

கனேடிய எல்லைப் பகுதியில் கோவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு

by Jey

கனேடிய எல்லைப் பகுதிகளில் கோவிட்-19 பரவுகையை கட்டுப்படுத்தும் நடைமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட உள்ளது.

கனடிய சமஸ்டி அரசாங்கம் இது தொடர்பிலான தீர்மானத்தை இந்த மாத இறுதி அளவில் வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.

தடுப்பூசி சான்றிதழ், கோவிட் எழுமாறான பரிசோதனை, அரைவ்கன் செயலி கட்டாய பயன்பாடு என்பன தொடர்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குறிப்பாக வெளிநாட்டு பிரஜைகள் கனடாவிற்குள் பிரவேசிக்கும் போது கட்டாயமாக தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை அமுலில் உள்ளது.

இவ்வாறான நடைமுறைகளில் தளர்வினை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

பயண மற்றும் சுற்றுலா துறைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இந்த கெடுபிடிகள் காரணமாக தாம் எதிர்நோக்கி வரும் அசௌகரியங்கள் பற்றி செய்த முறைப்பாடுகளின் எதிரொலியாக இந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட உள்ளது.

related posts