டொரன்டோவில் இடம் பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஜேன் ரோட் மற்றும் டிரிப்ட்வுட் அவென்யூ ஆகிய வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடுமையான கத்திக்குத்து தாக்குதல்களுக்கு இலக்காகிய இரண்டு பேரை போலீசார் மீட்டுள்ளனர்.
இதன்போது படுகாயம் அடைந்திருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மற்றும் ஒரு நபர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரியுள்னர்.