Home இலங்கை புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும் நலிவுற்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க

புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும் நலிவுற்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க

by Jey

நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

உண்மையில் தேசியசபை என்ற பெயரளவிலான நாடாளுமன்ற குழு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்திற்கு மேலே அமையவிருப்பதாகவே நாங்கள் அறிகின்றோம்.

இலங்கையில் பல ஆணைக்குழுக்கள், பல சபைகள் அனைத்தும் அமைத்து இன்று தேசியசபை என்பது இலங்கையின் குறுகிய நடுத்தர மற்றும் நீண்டகாலத் தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதற்கும் இன்னும் பல விடயங்களை உள்ளடக்கியதுமாக அமைக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் தேசிய அரசாங்கம் அமைப்பது, தேசிய வேலைத்திட்டம் செயற்படுத்துவது என்பன புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டிலே தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கலந்தாலோசனைகள் பல நடத்தி அது நிறைவேறாத காரணத்தினால் இன்று தேசியசபை அமைப்பதற்குப் பிரதமர் முடிவெடுத்திருக்கின்றார்.

related posts