Home இலங்கை திரிபோஷ போன்ற உணவுப் பொருட்களில் ஆபத்தான விஷம்…………

திரிபோஷ போன்ற உணவுப் பொருட்களில் ஆபத்தான விஷம்…………

by Jey

தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா போன்ற உணவுகளில் ஆபத்தனா அப்ளாடோக்சின் என்ற நச்சு கலந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தவறான தகவல்களை பரப்பும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திரிபோஷ போன்ற உணவுப் பொருட்களில் ஆபத்தான விஷம் கலந்திருப்பது தொடர்பில் வெளியான செய்தி முற்றிலும் தவறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இது குறித்து அறிவித்துள்ளார்.
ஆபத்தான நச்சுப் பொருள்

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் விவாதத்திற்கு உள்ளானது.
நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

இதேவேளை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் சமபோஷ, யஹபோஷ, லக்போஷ ஆகிய மூன்றிலும் ஆபத்தான விஷம் அடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற அப்ளாடோக்சின் என்ற பொருட்கள் அதிகளவில் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை விற்பனை செய்யும் 3 முன்னணி நிறுவனங்களின் 6 இயக்குனர்களையும் நவம்பர் 18ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

related posts