Home கனடா றொரன்டோவில் மகனின் கொடூர  செயல்; பெற்றோருக்கு நேர்ந்த அவலம்

றொரன்டோவில் மகனின் கொடூர  செயல்; பெற்றோருக்கு நேர்ந்த அவலம்

by Jey

றொரன்டோவின் இட்டோபிகொக்கில் 28 வயதான நபர் ஒருவர் தனது பெற்றோரை கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெர்காமோட் மற்றும் இஸ்லிங்டன் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாலையில் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

68 வயதான கொலின் ஹென்றி மற்றும் 67 வயதான விக்டோரியா ஹென்றி ஆகியோரே இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் றொரன்டோவைச் சேர்ந்த அல்பா ஹென்றி என்ற 28 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக பொலிஸார் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

related posts