Home விளையாட்டு 200 ரன்களுக்கு மேலான ரன் எதிரணியை மடக்குவதற்கு நல்ல ஸ்கோராகும்

200 ரன்களுக்கு மேலான ரன் எதிரணியை மடக்குவதற்கு நல்ல ஸ்கோராகும்

by Jey

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- எங்களது பந்துவீச்சு மெச்சும்படி இல்லை. 200 ரன்களுக்கு மேலான ரன் எதிரணியை மடக்குவதற்கு நல்ல ஸ்கோராகும். பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. ஏனெனில் எல்லா நேரமும் 200 ரன்களுக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. பேட்டர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.

குறிப்பாக ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் அருமை. அவரது அதிரடியால் தான் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடைய முடிந்தது. ஆனால் பந்து வீச்சு தான் எதிர்பார்த்தபடி இல்லை. இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இதே போல் பீல்டிங்கிலும் கிடைத்த வாய்ப்புகளை (3 கேட்ச் நழுவியது) பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். மொகாலி, அதிக ரன் குவிக்ககூடிய ஆடுகளம் என்பது தெரியும். இங்கு 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் கூட ரிலாக்சாக இருக்க முடியாது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக ஆடினர். சில ஷாட்டுகள் அசாதாரணமாக இருந்தது.

மேத்யூ வேட்- டிம் டேவிட் ஜோடியில் ஏதாவது ஒரு விக்கெட் எங்களுக்கு தேவைப்பட்டது. அதை எங்களால் செய்ய முடியவில்லை. இந்த ஜோடியை முன்கூட்டியே பிரித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். கிட்டத்தட்ட 32 பந்துகளில் 60 ரன்களுக்கு மேல் திரட்டி விட்டனர். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும்.இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

பாண்ட்யா பேட்டி ஆட்டம் முடிந்த பிறகு நிருபர்களை சந்தித்த இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நாம் அறிவோம். இப்போது தான் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு வந்திருக்கிறார்.

நல்ல நிலைக்கு திரும்புவதற்கு அவருக்கு போதுமான அவகாசம் கொடுக்க வேண்டியது முக்கியமாகும். அவருக்கு அதிகமான நெருக்கடி கொடுக்க மாட்டோம். இந்த மாதிரி நிலைமையில் அணியின் பந்து வீச்சு குறித்து கவலை இருக்கத் தான் செய்யும். ஆனால் நமது அணி வீரர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அணியில் இடம் பெற்றுள்ள 15 பேரும் நாட்டின் மிகச்சிறந்த வீரர்கள். அதனால் தான் அணியில் அங்கம் வகிக்கிறார்கள்.

related posts