Home விளையாட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்

by Jey

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை.

ஹர்திக் பாண்ட்யா (71 ரன்), லோகேஷ் ராகுல் (55 ரன்), சூர்யகுமார் யாதவ் (46 ரன்) ஆகியோரின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. ஆனால் பந்து வீச்சு தான் ஒட்டுமொத்தமாக சோடை போனது.

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும் (4 ஓவரில் 52 ரன்), ஹர்ஷல் பட்டேலும் (4 ஓவரில் 49 ரன்) இறுதிகட்டத்தில் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு வித்திட்டது.

 

related posts