“இந்தப் படத்தில் கதையும், திரைக்கதையும்தான் கதாநாயகன். இன்னொரு கதாநாயகன், ‘சாமான்யன்’ என்ற டைட்டில்.
நான் துப்பாக்கியை தூக்கி நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ‘இவர் வயற்காட்டில் வேலை செய்பவராச்சே… இவருக்கு ஏன் துப்பாக்கி’ என்று கேட்பார்கள்.
100 கோடி ரூபாய் கொடுத்தாலும், தாறுமாறான படங்களில் நடிக்க மாட்டேன். இவருடைய படங் களுக்கு மட்டும் பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறதே… எப்படி? என்று நான் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் கேட்பார்கள்.
பணத்துக்காக ராமராஜன் கொள்கையை மாற்ற மாட்டேன். தொடர்ந்து 45 படங்களில் கதாநாயகனாக நடித்தது நான்தான். இந்தப் படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. இப்படி ஒரு கதையில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.”