வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையினால் இலங்கை மக்கள் தற்போதுவரையில் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
உணவு, கல்வி, தொழில், வாழ்வாதாரம், மருத்துவம், விவசாயம் என அனைத்து வழிகளிலும் பொதுமக்கள் சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளதுடன் கடும் அதிருப்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில், எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்ற காரணிகள் பொதுமக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்த நிலையில் தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக தொடர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர்களும், அந்த தொழிற்துறையை நம்பியிருப்பவர்களும், வேலையின்மை, வருமானம் இன்மை போன்றவற்றால் தொழிற்துறையை கைவிட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.