கனடாவில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவில் இந்தியர்களை இலக்கு வைத்து இனக்குரோத வன்முறகைள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன ரீதியாகவும் பிரிவிணைவாத அடிப்படையில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அடிப்படையற்றது என கனடாவில் இயங்கி வரும் சீக்கிய குழுவொன்று தெரிவித்துள்ள.
அமைதியான முறையில் சீக்கிய சமூகம் முன்னெடுத்து வரும் அரசியல் செயற்பாடுகளை இலக்கு வைத்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை இந்திய அரசாங்கம் சுமத்துவதாக மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த சீக்கிய குழு குற்றம் சுமத்தியுள்ளது.