உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள புனித தலங்களுக்கு யாத்திரையாக செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை, மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டு, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் நேற்று பெய்த கனமழை காரணத்தால், மலையில் இருந்த பாறைகளின் பெரும் பகுதிகள் உடைந்து சரிந்ததில், ஆதி கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்லும் முக்கிய சாலைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நஜாங் தம்பா கிராமத்திற்கு அருகே நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் உள்ளூர் மக்களுடன் குறைந்தது 40 பக்தர்களும், தவாகாட் பகுதிக்கு அருகே சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தவாகத் – லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மலையின் பாறைகள் உடைந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால், ஆதி கைலாஷ் யாத்திரைக்கு செல்லும் முக்கிய பாதைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது