பியோனா புயல் காற்று காரணமாக கனடாவின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
நோவா ஸ்கோட்டியா, பிரின்ஸ் எட்வர்ட்ட தீவுகள் ஆகியனவற்றுக்கு பியோனா புல் தாக்கம் வெகுவாக உணரப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோட்டியாவில் சுமார் 14000 வீடுகள், வர்த்தக நிலையங்களுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
மாகாணத்தின் மத்திய பகுதியில் கூடுதல் அளவில் இந்த புயல் காற்றின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளில் சுமார் ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டது.
கனடாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.