வோகனில் இடம்பேற்ற தீ விபத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீடு ஒன்றில் இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த தீ விபத்துச் சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீ விபத்துக்கு உள்ளான நிலையில் குறித்த பெண்ணை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பெண் மரணமடைந்தமைக்கான காரணங்களை பொலிஸார் வெளியிடவில்லை என்ற போதிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது என அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.