பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் நாசாவின் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. நாசாவின் இந்த திட்டத்துக்கு டார்ட் எனப் பெயரிடப்படுள்ளது. அதாவது ‘இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை (டார்ட்)’ ஆகும். சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோள்கள் பூமியை தாக்குவதிலிருந்து தவிர்க்க இது ஒரு முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது.
கிரக பாதுகாப்பு என்பது சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் ஒரு முயற்சியாகும். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க ‘கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ)’ ஒன்றை நிறுவி உள்ளது.
இது அபாயகரமான பொருட்களை முன்கூட்டியே கண்டறிகிறது. அபாயகரமான பொருட்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 5 மில்லியன் மைல்களுக்குள் வரும் என்று கணிக்கின்றன; பூமியின் மேற்பரப்பை சேதப்படுத்தும் அளவுக்கு நெருங்கி வரும் அபாய பொருட்களை கண்காணித்து வகைப்படுத்துகிறது, விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கைகளை வெளியிடுகிறது.
இத்திட்டம் என்பது பூமியை தாக்கும் சிறுகோள் அல்லது வால்மீன் அபாயங்களுக்கு எதிராக பூமியைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பத்தை சோதிக்கும் உலகின் முதல் பணியாகும். நாசாவின் இந்த திட்டத்துக்கு டார்ட் என்ற விண்கலம் விண்ணில் பாய்கிறது.
நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எவ்வாறு காணலாம்? இந்த விண்கலம் டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோள் மீது ஒரு மணி நேரத்திற்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில் மோதி அதன் சுற்றுப்பாதையை சிறிது திசைதிருப்பவும் மாற்றவும் செய்யும்.இந்த முயற்சி வெற்றியடைந்தால், பூமிக்கு அருகில் உள்ள பொருள்களுக்கு எதிரான கிரக பாதுகாப்பு முயற்சியின் முக்கிய அங்கமாக மாறும்.
மணிக்கு சிறுகோளுடன் மோதுகிறது. இதன் நேரடி ஒளிபரப்பு நாசா தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்குத் தொடங்கும்.இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:44 க்கு நடக்கும். டிமோர்பாஸ் என்ற விண்கல் அல்லது ஒரு குறுங்கோள் எனலாம், அது இன்று நாசாவின் விண்கலத்தால் தகர்க்கப்படுகிறது. இந்த விண்கல் சுமார் 525 அடி அளவிலானது.
இந்த விண்கல் 2500 அடி அகலம் கொண்ட டிடிமோஸ் என்ற சிறுகோள் ஒன்றை சுற்றி வருகிறது. டிமோர்பாஸ் என்ற குறுங்கோளை அழிப்பது நாசாவின் குறிக்கோள் அல்ல, மாறாக இந்த தாக்குதலின் மூலம் அதனை அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து திசைதிருப்புவதே நோக்கமாகும்.வினாடிக்கு சுமார் 4 மைல்கள் அல்லது 15,000 மைல் வேகத்தில் மோதி அதன் சுற்றுப்பாதையை சிறிது திசைதிருப்பவும் மாற்றவும் செய்யும். சிறிய ரக காரின் அளவிலான டார்ட் என்ற விண்கலம் குறுங்கோளில் மோதி வெடித்துவிடும்.
அதன்பின், அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லிசியாகியூப் எனப்படும் சிறிய செயற்கைக்கோள் ஒன்று, குறுங்கோளில் இருந்து 25 முதல் 50 மைல்களுக்குள் சில நிமிடங்களில் பறக்கும். அப்போது இந்த விபத்தினால் உண்டாகும் சேதங்கள் மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றை படம்பிடித்துக்காட்டும்.