நாஸ்ட்ரடாமஸின் மற்றொரு கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானியர்களை அதிரவைத்துள்ளது
பிரித்தானிய மகாராணியார் தனது 96ஆவது வயதில் இயற்கை எய்துவார் என பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 450 வருடங்களுக்கு முன்பே கணித்துள்ளதாகவும், அந்த கணிப்பு மிகச்சரியாக நிறைவேறிவிட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது என்னவென்றால், மன்னர் சார்லஸ் தன் பதவியைத் துறக்கக் கட்டாயப்படுத்தப்படுவார் என்றும், அதைத் தொடர்ந்து இளவரசர் ஹரி மன்னராக பதவியேற்பார் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க ஒரு விடயம் என்னெவென்றால், நாஸ்ட்ரடாமஸ் எந்த விடயத்தையும் நேரடியாக பெயர் குறிப்பிட்டு உரைநடையாக எழுதிவைக்கவில்லை. அவர் கவிதைகளாக எழுதிவைத்த விடயங்களே மற்றவர்களால் விளக்கப்படுகின்றன.
அவ்வகையில், Mario Reading என்ற பிரித்தானிய எழுத்தாளர் நாஸ்ட்ரடாமஸின் கவிதைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களை விளக்கியுள்ளார். அவற்றில் ஒன்று மகாராணியாரின் மரணம்.
மகாராணியார், 2022ஆம் ஆண்டு, தனது 96ஆவது வயதுவாக்கில் இயற்கை எய்துவார் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு, சார்லஸ் மன்னராகும் போது அவருக்கு 74 வயது இருக்கும், ஆனால், இளவரசி டயானாவை சார்லஸ் விவாகரத்து செய்ததால் பொதுமக்களில் ஒரு சாரார் சார்லஸ் மீது வைத்திருக்கும் வெறுப்பு, இன்னமும் நீடிக்கிறது.
இதற்கிடையில், மன்னராவார் என சற்றும் எதிர்பாராத ஒரு நபர் மன்னராவார் என நாஸ்ட்ரடாமஸ் எழுதிவைத்திருக்கிறாராம்.
அப்படியானால், மன்னராவார் என மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் வில்லியம் மன்னராகாமல், மன்னராக வாய்ப்பில்லை என கருதப்படும் இளவரசர் ஹரி மன்னராவார் என்று பொருளா என கேள்வி எழுப்புகிறார் .
அப்படி ஹரி மன்னரானால், அவர் தனது 38ஆவது வயதில் மன்னராவார் என்கிறார் .
இந்த அதிரடி விளக்கங்கள் போக, மற்றொரு விடயம் குறித்தும் எழுதியிருக்கிறார் . அது என்னவென்றால், சார்லஸ் மன்னராக இருக்கும்போதே காமன்வெல்த் நாடுகளில் பல அந்த அமைப்பிலிருந்து பிரிந்துசென்றுவிடும் என்றும் கணித்துள்ளாராம் நாஸ்ட்ரடாமஸ்.