ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜோன் வீதி மற்றும் யோங் வீதி ஆகியனவற்றுக்கு இடையில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
கவனயீனமாக வாகனத்தை செலுத்தியதனால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த நபர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை இந்த சம்பவத்தில் மேலும் எவரும் காயமடைந்துள்ளார்களா என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை.
இந்த விபத்து சம்பவத்துடன் போலீசாருக்கு ஏதேனும் தொடர்பு உண்டா என்பது குறித்து விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது