டொரன்டோ பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ன்று இடம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை டொரண்டோ போலீசார் கைது செய்துள்ளனர்.
கெலீ மற்றும் சென் ரேஜஸ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.