Home கனடா ஒன்றாரியோவில் குடும்ப மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு

ஒன்றாரியோவில் குடும்ப மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் குடும்ப மருத்துவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட முதல் ஆறு மாத காலப் பகுதியில் சுமார் 170000 பேர் குடும்ப மருத்துவர்களின் சேவையை இழந்துள்ளனர்.

மொத்தமாக ஒன்றாரியோவைச் சேர்ந்த 1.8 மில்லியன் பேருக்கு வழமையான குடும்ப மருத்துவர்களின் வசதியில்லை என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதம ஆய்வாளர் டொக்டர் தாரா கிரன் தெரிவித்துள்ளார்.

குடும்ப மருத்துவர்களில் ஒரு தொகுதியினர் ஒய்வு வயதினை அடைந்துள்ளதனால் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

related posts