சென் கத்தரியன்ஸ் பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை விபத்து காரணமாக 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நயாகரா பகுதியில் பீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தொழிற்சாலையில் காணப்பட்ட ஹைட்ராலிக் எனப்படும் அமிலம் கசிவடைந்த காரணத்தினால் இவ்வாறு 23 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் விரைவில் அவர்கள் வீடு திரும்புவர் எனவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.