Home உலகம் மேடையில் தனது தலை முடியை வெட்டிய பாடகி

மேடையில் தனது தலை முடியை வெட்டிய பாடகி

by Jey

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 17-ம் தேதி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது.

இதுவரை 46 நகரங்களில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் பரவியுள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆதரவு தெரிவித்த துருக்கி பாடகி அதேவேளை, ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது. ஈரான் பெண்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு துருக்கி பாடகி ஆதரவு தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டின் பிரபல பாடகி மிலிக் மோசோ. இவர் நேற்று அந்நாட்டில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பாடலை பாடிமுடிந்த பின்னர் நிகழ்ச்சி மேடையில் மிலிக் மோசா தனது தலைமுடியை வெட்டி ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

related posts