வோகன் பகுதியில் பெண் ஒருவரின் கொலை தொடர்பில் 71 வயது நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வோகனின் ரத ஷபோர்ட் மற்றும் ஜென் வீதிகளுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் காயமடைந்திருந்த பெண் ஒருவரை மீட்டு போலீசார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட போலீசார் இது ஓர் கொலை முயற்சி என தெரிவித்தனர்.
அந்த வகையில் விசாரணைகளின் அடிப்படையில் இந்த தீ விபத்து சம்பவத்துடன் 71 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
71 வயதான முகமத் அஸ்கரயார் என்ற நபரை இவ்வாறு போலீசாரால் கைது செய்துள்ளனர்.
இந்த தீ விபத்துச் சம்பவத்தில் நாஹித் அஸ்கரயார் என்ற 64 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.