இலங்கையை பொறுத்தவரை தற்போதைய தேவை அதன் மூன்று முக்கிய கடன் வழங்குநர்களான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஆகும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதித்து பணியாளர் அளவிலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கடனாளிகளுடன் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் தொடர்பான உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு இடம்பெற்ற பின்னர் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் தொடரும்.”என தெரிவித்துள்ளார்.