Home இந்தியா கறவை மாடு வாங்க ரூ.1½ லட்சம் நிர்ணயம்

கறவை மாடு வாங்க ரூ.1½ லட்சம் நிர்ணயம்

by Jey

திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடு வாங்க ரூ.1½ லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 சதவீதம் மானியத்தொகையும், மீதம் உள்ள தொகை வங்கிக்கடனாகவும் வழங்கப்பட உள்ளன.தியான ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருந்தால் http://fast.tahdco.comஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

24 மணி நேரமும் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் புகைப்படம், சாதிச்சான்று, வருமான சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடசான்று, ஆதார் அட்டை, மாடு வாங்குபவரிடம் இருந்து பச்சை தாளில் மாடுகளின் விலை குறிப்பிட்டு எழுதிக்கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

related posts