Home இந்தியா போலிப் பத்திரப்பதிவால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு ரத்து

போலிப் பத்திரப்பதிவால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு ரத்து

by Jey

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப்பதிவு செய்துவருவது தொடர்ந்து கொண்டிருந்தது.

நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளர்களால் புகார் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து, பதிவு செய்யப்பட்ட பத்திரம் போலியானது என்று கண்டறிந்தால், அதை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

போலிப் பத்திரப்பதிவால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதற்கான ஆணைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிமையாளர்களிடம் வழங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இச்சட்டத்தின் மூலம் போலி பத்திரப்பதிவை அறவே ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரத்தில் இது இன்னொரு மைல் கல் ஆகும்.

related posts