ஜப்பானின் சோனி நிறுவனம் இரைச்சலைத் தவிர்க்கும் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜப்பானின் சோனி நிறுவனம் துல்லியமாக சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்ட (ஏ.என்.சி.) ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. டபிள்யூ.ஹெச்.1000 எக்ஸ். எம் 5. என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.
இதில் ஒருங்கிணைந்த பிராசஸர் உள்ளது. இது சோனி நிறுவனத்தின் பிரத்யேக நுட்பமான சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் கொண்டது. எடை குறைவான கார்பனால் ஆன வெளிப்புற பகுதி காரணமாக நுட்பமான இசை வெளிப்பாடுகளையும் துல்லியமாக இது வெளிப்படுத்தும்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட சாதனங்களில் இதை இணைத்து செயல்படுத்த முடியும். இதில் எல்.டி.ஏ.சி. கோடெக் சப்போர்ட், டி.எஸ்.இ.இ. எக்ஸ்ட்ரீம் மற்றும் நுட்பமான குரல் கேட்டு செயல்படும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை உள்ளன. இதில் உள்ள மைக்ரோபோன் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால் உங்களது குரலைக் கேட்டு இது செயல்படும்.
இதில் உள்ள தானியங்கி ஒலி கட்டுப்பாட்டு அமைப்பானது, நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஒலி அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும். இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் செயல்படும். கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.34,990.