கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் கோவிட் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கோவில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் அண்மைய வாரங்களில் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அதற்கு முன்னைய வாரத்தை விடவும் 11 வீத நோயானவர்கள் பதிவாகியுள்ளனர்.
ஒன்றாரியோ வைத்தியசாலைகளில் 1265 கோவிட் தொற்று உறுதியாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் கோவிட் தொற்று உறுதியாளர்களில் 133 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எவ்வாறு எனினும் கடந்த கோடை காலத்தில் மாகாணத்தில் காணப்பட்ட கோவிட் நோயாளர் எண்ணிக்கையிலும் தற்போதைய எண்ணிக்கை குறைவானது என சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அண்மைக்காலமாக மாகாணத்தில் நிலவும் குளிருடனான கால நிலை காரணமாக தொற்று உறுதியாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.