சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு கடந்த 1954ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய அக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் அக்டோபர் முதலாம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இதேவேளை, இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது. 1990ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோர்களாகக் கருதப்படுகின்றனர்.
அம்பாறை
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாட்டில் கல்முனை இயேசு சீவிக்கின்றார் சிறுவர் இல்ல சிறுவர்களுக்கான கற்றல் உபகரண தொகுதிகள் இன்று (01.10.2022) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் தலைமையில் இடம்பெற்றது