Home இலங்கை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு

by Jey

ஹெராயின் கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்ல இருந்த மஹின் அபுபக்கர், முகமது மீரா ரஜூலுதீன் ஆகியோர் 2 கிலோ ஹெராயினை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜூலியட் புஷ்பா, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

பொது சுகாதாரத்திற்கு பெருத்த அச்சுறுதலாக போதைப் பொருள் இருப்பதாகவும், அதனால் உலக சமுதாயம் தீவிர அச்சுறுத்தலை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீடித்த வளர்ச்சி, சமூக, பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மை, போதைப் பொருளால் பாதிக்கப்படுவதாகவும், உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

related posts