ஒன்றாரியோ மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளது.
மாகாணத்தில் மணித்தியாலம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 15.50 டொலர் குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க மணித்தியாலம் ஒன்றுக்கான குறைந்தபட்ச சம்பளம் 50 சதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.
கனடாவில் பணவீக்கம் 40 ஆண்டு கால உயர்வினை பதிவு செய்துள்ளது.
வருடாந்த அடிப்படையில் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்பட உள்ளதாக முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.