ஈரானிய பெண்ணுக்கு நீதி வேண்டி கனடாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஒன்றாரியோவின் ரிச்மன்ட்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான ஹிஜாப்பை சரியாக அணியாத காரணத்தினால் ஈரானிய அதிகாரிகள் பெண்ணை கைது செய்தனர்.
22 வயதான மாஷா அம்னி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டு கனடாவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈரானிய மக்களின் அடிப்படை மனித உரிமைகளை அரசாங்கம் மீறி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.