ஒன்றாரியோ மாகாணத்தில் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்த படைவீரர்கள் நினைவு கூறப்பட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உயிர் நீத்த தீயணைப்பு படை வீரர்களை நினைவு கூறும் வகையில் டொரன்டோவில் இந்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாகாண முதல்வர் டாக்போர்ட் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்மை பாதுகாப்பதற்காக தைரியமாக தங்களது உயிர்களை தியாகம் செய்த தீயணைப்பு படை வீர வீராங்கனைகளுக்கு நன்றி பாராட்ட சந்தர்ப்பம் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
கடமை என்ற பெயரில் அதி உச்ச தியாகத்தை செய்த தீயணைப்பு படை வீரர்கள் நம் எல்லோருக்கும் ஹீரோக்களே என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தீயணைப்பு நடவடிக்கைகளின் போது உயர்நீத்த படைவீரர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய நினைவுப் பலகை என்றும் இந்த நிகழ்வில் திரை நீக்கம் செய்யப்பட்டது.