Home இலங்கை தற்காப்புக் கலை போட்டிகளில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி சாதனை

தற்காப்புக் கலை போட்டிகளில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி சாதனை

by Jey

இலங்கைக்கான சர்வதேச தற்காப்புக் கலை சங்கம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய போட்டிகளில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர்.

இம்முறை சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தற்காப்புக் கலை போட்டிகளில் வாழைச்சேனை இந்துக் கல்லூரியை சேர்ந்த 13 மாணவர்கள் ஜப்பான் கராத்தே – தோசோட்டோகான் பயிற்சி கழகத்தின் சார்பாக கலந்துகொண்டுள்ளனர்.

காத்தா மற்றும் சண்டைஆகிய இரண்டு போட்டிகளிலும் குறித்த மாணவர்கள் கலந்துகொண்டு அதிகூடிய 18 பதக்கங்களை தம் வசப்படுத்தி கொண்டுள்ளனர்.

குறித்த போட்டிகளில் ந.நியோகிறிஸ்மன், ம.மனோஷ், பா.யுனித், சு.மதுர்ஷினி, சு.டென்சிக்கா ஆகியோர் எட்டு தங்கப் பதக்கங்களையும் ச.நோயல் றிதுஷன், உ.கேசோபன், த.டிதுர்ஷன், றா.சிலோசிக்கா, சு.டென்சிக்கா ஆகியோர் ஆறு வெள்ளிப் பதக்கங்களையும் சு.அகோஸிதன், ந.நியோகிறிஸ்மன், ச.நோயல் றிதுஷன் அகிய வீரர்கள் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் பெற்று வாழைச்சேனை பிரதேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முறையான பயிற்சி

இம்மாணவர்களை வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒரேயொரு பயிற்றுவிப்பாளர் ‘சென்சி’த.சதானந்தகுமார் பயிற்றுவித்துள்ளார்.

இப்போட்டியில் இந்திய மாணவர்களும் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் அவர்களையும் வெற்றி கொண்டு இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts