Home இலங்கை நீண்ட கால தேசிய கொள்கைகள் இல்லாத எந்தவொரு நாட்டையும் அபிவிருத்தி செய்ய முடியாது

நீண்ட கால தேசிய கொள்கைகள் இல்லாத எந்தவொரு நாட்டையும் அபிவிருத்தி செய்ய முடியாது

by Jey

இழந்த வாய்ப்புகளுக்காக வருந்துவதற்குப் பதிலாக, உளப்பாங்கு ரீதியிலான விழிப்புணர்வினால் மட்டுமே நிகழ்கால மற்றும் எதிர்கால வாய்ப்புகளை அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்த முடியும்.

36ஆவது உலக குடியிருப்பு தினத்தை கொண்டாடும் உங்களை இப்பணிக்காக அழைக்கிறேன். நாம் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

நம்மை விட குறைந்த சமூக பொருளாதார நிலையைக் கொண்டிருந்த பிராந்திய மற்றும் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் ஏற்கனவே நம்மைக் கடந்து சென்றுவிட்டன.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்க பொருளாதாரத்தின் மூலம் நிலையான அபிவிருத்தியை அடைய உதவும் நீண்டகால தேசிய கொள்கைகள் இல்லாத ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது கடினமானதொரு பணியாகும்.

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட எதிர்பார்த்துள்ள இவ்வேளையில், எமது அடுத்த 25 வருட திட்டங்களில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் என்றென்றும் சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றோம். 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 வீடுகள் நிர்மாணிக்கும் பணியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

related posts