வடுகபாளையத்தில் பொதுமக்கள் பிரச்சினையை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடுகபாளையம் ஆதிதிராவிடர் காலணியில் உள்ள பழுதடைந்த மகளிர் சுகாதார வளாகத்திற்கு பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் பணிகள் நடைபெறவில்லை.
உடனே பணிகளை துவக்க கோரியும், ஆதிதிராவிடர் காலனிக்கு புதிய மழைநீர் வடிகால் அமைத்து தரக்கோரியும், குடிநீர் வடுகபாளையம் பகுதிக்கு இரண்டு நாட்கள் ஒரு முறை கிடைப்பதை முறையாக விநியோகம் செய்யக்கோரியும், ராயகவுண்டம்புதூரில் விழுந்து விடும் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை அகற்றி புதிய மேல்நிலைத் தொட்டி அமைத்து தரக்கோரியும், நஞ்சை தாமரைக்குளம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள சாக்கடைக்கு மூடுகள் அமைத்து தரக்கோரியும், கிராம நிர்வாக அலுவலகம் முன்பு உள்ள பழைய கிணற்றுகளுக்கு கம்பி வலை அமைக்க கோரியும், வடுகபாளையம், ராயகவுண்டம்புதூர், நஞ்சை தாமரைக் குளம், பகுதியில் உள்ள மயானத்தை சுத்தம் செய்து, தெரு விளக்கு, சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரியும், காட்டுவளவு பகுதிக்கு கான்கிரீட் சாலை மற்றும் அண்ணாமலை கார்டனுக்கு தெரு விளக்கு வசதி செய்து தரக் கோரியும், வீடுக்கு குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இணைப்பு வழங்க கோரியும், இக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்.