கனடாவின் கியூபெக் மாகாண சபை தேர்தலில் பிரான்கயிஸ் லெக்லாட் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தலில் லெக்லாட்டின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தேர்தலில் வெற்றி அடைந்ததன் பின்னர் லெக்லாட் தமது ஆதரவாளர்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
தாம் ஒட்டுமொத்தியூபெக் மக்களின் முதல்வராக கடமையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலிலும் லெக்லாட் வெற்றியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இரண்டாவது தடவையாகவும் லெக்லாட் கியூபெக் மாகாண முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன மத மொழி கட்சி பேதங்களை களைந்து அனைவருக்காகவும் சேவையாற்ற உள்ளதாக லெக்லாட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.